உ.பி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை..!

உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

உ.பி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை..!

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சிகரமாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ, மாணவியருமே தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, 385 பள்ளிகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான மாணவ, மாணவியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய காலகட்டத்தில் உயர்நிலைப் பள்ளி தேர்வில் அதிகப்படியாக காப்பி அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் கௌசாம்பி இடத்தில் உள்ள 13 பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இதுபோலவே, மேல்நிலைப் பள்ளி தேர்வில் அலிகார் மற்றும் மணிபூரில் தலா 7 பள்ளிகள் பூஜ்ஜிய சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பள்ளி தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தரப்பிரதேச பள்ளிக் கல்வி இயக்குநரான வினய் குமார் கூறியுள்ளார்.

10-ஆம் வகுப்பை பொருத்தவரை 50 அரசு பள்ளிகளும், 5 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 84 தனியார் பள்ளிகளும் "0" சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன. 12-ஆம் வகுப்பை பொருத்தவரை 15 அரசுப் பள்ளிகளும், 58 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் "0" சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UP Board results shocker: 165 schools achieve zero results due to anti- copying measures
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+