பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து கொள்ளலாம்! யுஜிசி பரிந்துரை?

பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து கொள்ளலாம்! யுஜிசி பரிந்துரை?

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படாமலேயே உள்ளது.

இதனிடையே, இந்த தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆராய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவினர் தற்போது மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை அளித்துள்ளது.

அதில், "கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக அதிகரித்தபடியே உள்ளது. தற்போது தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களின் பருவத் தேர்வை ரத்து செய்யலாம்.

மேலும், முந்தைய ஆண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சியை பல்கலைக்கழகம் முடிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவை பருவத் தேர்வை ஏற்கெனவே ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Unlock 2: College, University Final Year Exams may be Cancelled
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+