இந்திய மாணவர்களுக்காக ஆன்-லைன் பல்கலை.தொடக்கம்!!

Posted By:

சென்னை: இந்திய மாணவர்களுக்காக ஆன்-லைன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான பல்கலைக்கழகம் என்ற அடைமொழியுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பெயரும் யுனிவர்சிட்டி ஆஃப் தி பீப்பிள் என்பதுதான். இது உலகின் முதலாவது லாப-நோக்கமற்ற, பயிற்சிக் கட்டணம் இல்லாத பல்கலைக்கழகமாகும். மேலும் அமெரிக்கன் ஆன்-லைன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றதாகும்.

இந்திய மாணவர்களுக்காக ஆன்-லைன் பல்கலை.தொடக்கம்!!

உலக அளவில் உயர்கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கப்படவேண்டும் என்பதுதான் இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.

இந்த நிலையில் இந்திய மாணவர்களுக்காகவும் இந்த ஆன்-லைன் பல்கலைக்கழகம் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகளை இது வழங்கவுள்ளது.

மேலும் புதிய எம்பிஏ படிப்புகள், சுகாதார அறிவியல் தொடர்பான படிப்புகளையும் அறிமுகம் செய்யவுள்ளது இந்த பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்துக்கு தற்போது 170 நாடுகளில் மாணவர்கள் உள்ளனர்

தற்போது நியூயார்க் பல்கலைக்கழகம், யேல் சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றுடன் இந்த பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட், இன்டெல், எச்பி நிறுவனங்களின் ஆதரவுடன் இது நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு www.uopeople.edu என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
University of the People, which claims to be the world's first non-profit, tuition-free, accredited American online university, has said it is dedicated to opening access to higher education globally. In an official statement, the university said it has opened its doors to Indian students, offering tuition-free, accredited online associate and bachelor degree programs in business administration and computer science. It is currently in the process of developing new health science and MBA degrees..

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia