சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகம், துணை நூலகர், உதவி நூலகர் என 11 இடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அக்டோபர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

நூலக அறிவியல், தகவல் அறிவியல், டாக்குமென்டேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பட்டமேல் படிப்பு முடித்திருக்கவேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். நூலகர், துணை நூலகர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும்.
1857-ல் தொடங்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம், இந்தியாவிலுள்ள பழமையான பல்கலைக்கழகங்களி்ல் ஒன்றாகும். இங்குள்ள நூலகம் ஆசியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications












