ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ சேர ஆசையா?

Posted By:

சென்னை: ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

2016-18-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை இப்போது ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளது. மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், ஃபைனான்ஸ் மேனேஜ்மெண்ட், ஆப்பரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட், ஹியூமன் ரிசோர்ஸஸ் மேனேஜ்மெண்ட், என்டர்புரூனர்ஷிப் ஆகிய துறைகளில் எம்பிஏ படிப்புகளில் சேர முடியும்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ சேர ஆசையா?

இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சேர விரும்புபவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.350 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.uohyd.ac.in -ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
University of Hyderabad has invited applications for admissions to 2 years MBA programmes in the following specialisation for the academic session 2016-18. The programmes offered are: Marketing Management, Finance Management, Operations Management, Human Resources Management and Entrepreneurship

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia