இனி ஹைதராபாத் பல்கலை.யில் ஆன்-லைன் மூலம் சேர்க்கை!!

Posted By:

சென்னை: ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் மட்டுமே மாணவ, மாணவிகளின் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் போடில் கூறியதாவது: சேர்க்கையை எளிமைப்படுத்துவதற்காக அடுத்த கல்வியாண்டு முதல் ஆன்-லைன் சேர்க்கை முறையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வு விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆன்-லைன் மூலம் செய்யப்படும்.

இனி ஹைதராபாத் பல்கலை.யில் ஆன்-லைன் மூலம் சேர்க்கை!!

பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய நிதியைக் கொண்டு ஆன்-லைன் சேர்க்கைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

பல்கலைக்கழகத்தில் மேலும் 100 பேராசிரியர்கள் நியமித்தல், பட்டமேற்படிப்பில் புதிய படிப்புகளை அறிமுகம் செய்தல் என பல புதிய திட்டங்களையும் அமல்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.

English summary
University of Hyderabad (UoH) is all set to conduct online admissions from next academic year as announced by Appa Rao Podile, the new vice chancellor (VC) on Tuesday. Along with admissions, taking a step forward, the varsity would also make services such as verification, filling of examination form etc.UGS funds granted to varsity will be utilised to make the process online. Moreover, other decisions were also taken by varsity for the upcoming academic year which includes introduction of Master in Education course, appointment of 100 teachers to fill up the sanctioned posts and strengthen proctorial board.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia