டெல்லி பல்கலைக்கழகத்தில் வேலை வேணுமா....!!

Posted By:

டெல்லி: டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வல்லபபாய் படேல் செஸ்ட் இன்ஸ்டிடியூட்டில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் வேலை வேணுமா....!!

பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 19 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்ம் செய்யலாம்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.500-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பதிவு செய்தால் போதும்.

நேர்முகத் தேர்வு மூலம் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை The Joint Registrar, VP Chest Institute, University of Delhi, P.O. Box No. 2101, Delhi - 110007 என்ற முகவரிக்கு தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.du.ac.in/du/index.php?page=vallabhbhai-patel-chest-institute என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by Vallabhbhai Patel Chest Institute from the University of Delhi for 19 posts of Professor, Associate and Assistant Professor. Details of this recruitment are listed below

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia