கொல்கத்தா பல்கலை.யில் உதவி நூலகர் வேலை!!

Posted By:

சென்னை: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள உதவி நூலகர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 7-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

மொத்தம் 23 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு லைப்ரரி சயின்ஸ், லைப்பரி, இன்பர்மேஷன் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.

கொல்கத்தா பல்கலை.யில் உதவி நூலகர் வேலை!!

மேலும் லைப்பரி சாஃப்ட்வேர்களை கையாளத் தெரிந்திருக்கவேண்டும். வயது 18 முதல் 40-க்குள் இருக்கலாம்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்குக் கிடையாது. மற்ற பிரிவினருக்குரூ.80 வசூலிக்கப்படும்.

தகுதியுள்ளவர் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம் Central Receiving Section, Office of the Registrar, University Of Calcutta, 87/1, College Street, Kolkata - 700 073 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மார்ச் 7 ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.caluniv.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

English summary
University of Calcutta invited applications for 23 Assistant Librarian posts. The eligible candidates can apply to the post through the prescribed format latest by 07 March 2016 till 5.00 PM. Notification detailsAdvt. No. EST/81/39A dated 04/02/2016 University of Calcutta Vacancy Details Name of the Post: Assistant Librarian Grade-II Number of Post: 23 Posts Eligibility Criteria for University of Calcutta Assistant Librarian Jobs Educational Qualification & Experience: Bachelor Degree in Library Science/Library and Information Science from a recognized University/ Institution with Knowledge of handling library softwares. Age Limit 18-40 Years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia