பிஜிஏடி தேர்வு தேதி: அலகாபாத் பல்கலைக்கழகம் அறிவிப்பு...!!

Posted By:

அலகாபாத்: அலகாபாத் பல்கலைக்கழகம் பி.ஜி. படிப்புகள் சேர்க்கை தேர்வு (பிஜிஏடி) தேதியை அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வுகளை மே 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அலகாபாத் பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது.

பிஜிஏடி தேர்வு தேதி:  அலகாபாத் பல்கலைக்கழகம் அறிவிப்பு...!!

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மே 21-ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

பட்டமேற்படிப்பில் பிஸிக்கல் சயின்ஸஸ், மேத்தமெட்டிக்கல் சயின்ஸஸ், கெமிக்கல் சயின்ஸஸ், லைப் சயின்ஸஸ், ஜியோசயின்ஸஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்கவுள்ளது இந்த பல்கலைக்கழகம்.

இந்தப் படிப்பில் சேர ஆன்-லைன் முறையி்ல் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே படிப்பில் சேர முடியும். இந்தத் தேர்வு 2 பிரிவாக நடைபெறும். முதல் தாள் பொது விழிப்புணர்வு, நாட்டு நடப்புகள், பொது அறிவியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் இடம்பெறும்.

2-வது தாளில் 35 கேள்விகள் இடம்பெறும். இந்தத் தேர்வுக்கு மே 8 -ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

தேர்வு மே 25 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.allduniv.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Exam dates for Post Graduate Admission Test (PGAT) 2016 has been announced by the University of Allahabad (AU). The exam is scheduled to be conducted from May 25, 2016 to May 30, 2016. Registrants can download the admit cards on May 21, 2016. Eligibility Criteria: For M.Tech programme: Candidates should have Master's degree in Physical Sciences/ Mathematical Sciences/ Chemical Sciences/ Life Sciences/ Geosciences/any cognate discipline from a recognised university/institute. For M.Sc programme: Candidates should be holding Bachelor's degree in the respective discipline from a recognised university/ institute. How to Apply? Aspirants should visit the official website to apply online

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia