யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

Posted By:

டெல்லி: யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (யுபிஐ) கம்பெனி செக்கரட்டரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். கம்பெனி செக்கரட்டரி பணியிடங்கள் 2-ம், அதிகாரி (செக்யூரிட்டி) பணியிடங்கள் 5-ம் காலியாகவுள்ளன.

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

கம்பெனி செக்கரட்டரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் எல்எல்எம், எல்எல்பி படித்திருக்கவேண்டும். வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். சம்பளம் ரூ.23,700-42,020 என்ற அடிப்படையில் கம்பெனி செக்கரட்டரி பணியிடங்களுக்கு வழங்கப்படும். மேலும் அதிகாரி பணியிடங்களுக்கு ரூ. 31705-45950/- என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள், விண்ணப்பங்களுடன் தகுந்த ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமும் அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 28-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு http://www.unitedbankofindia.com/english/home.aspx என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

English summary
Applications are invited by United Bank of India (UBI). UBI is looking out for 7 Company Secretary (CS) and Officer ( Security) Posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post and Number of Posts: Company Secretary (CS)- 2 Posts Officer (Security)- 5 Posts Who is Eligible for the United Bank of India Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia