உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களின் 2022ம் ஆண்டுக்கான, தேசிய அளவிலான தரவரிசை பட்டியல் (NIRF) வெளியாகியுள்ளது. அதில், பாரம்பரியம் கொண்ட ஐஐடி மெட்ராஸ், ஒட்டு மொத்த இந்தியாவின் சிறந்த கல்லூரியாக தேர்வாகி, மீண்டும் முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை, இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல், மேலாண்மை, மருந்தகம், கல்லூரிகள், கட்டிடக்கலை, சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய 11 பிரிவுகளில், NIRF இந்தியா தரவரிசை 2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்பித்தல், கற்றல், வளங்கள்; ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு பிரிவுகளின் கீழ், கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்படுத்தப்படுவதாக, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF)குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், ஒவ்வொரு பிரிவுக்கு சராசரியாக மதிப்பெண் கணக்கிடப்படும். அவ்வாறு கணக்கில் கொள்ளப்படும் சராசரி மதிப்பெண்கள், ஒவ்வொரு பிரிவுகளுடன் வேறுபடும்.

கடந்தாண்டை போல NIRF தரவரிசை 2022ல், ஒட்டுமொத்த மற்றும் பொறியியல் பிரிவில், ஐஐடி மெட்ராஸ் சிறந்த நிறுவனமாக மீண்டும் இடம்பெற்றது.

அதாவது, தரவரிசைப் பட்டியலில், ஒட்டுமொத்தமாக சென்னை ஐஐடி முதலிடத்தையும், இரண்டாம் இடத்தில் ஐஐஎஸ் பெங்களூரும், மூன்றாவது இடத்தில் மும்பை ஐஐடி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பல் மருத்துவத்தில், சென்னை சவேதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் மூன்றாம் இடத்திலும், மருத்துவத்தில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி மூன்றாம் இடத்திலும், கல்லூரியில் சென்னை பிரசிடென்சி கல்லூரி மூன்றாம் இடத்திலும், சென்னை லயோலா கல்லூரி நான்காம் இடத்திலும் உள்ளன.

இதேபோல பல்கலைக்கழகத்தில், வேலூர் தொழில்நுட்ப கல்லூரி நிறுவனம் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Ranking List (NIRF) for the year 2022 of India's Higher Education Institutions will be released today. Union Education Minister Dharmendra Pradhan will release the ranking list of colleges and educational institutions across the country today.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X