கூகுள் அறிவியல் விருதை பெற்ற இளம் விஞ்ஞானி லலிதாவுக்கு மத்திய அரசு பாராட்டு

Posted By:

சென்னை: 13 வயதில் கூகுள் அறிவியல் விருதை வென்று சாதனை படைத்துள்ள இளம் வி்ஞ்ஞானிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கியுள்ளது.

அறிவியல் துறையில் சாதிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதை ஒடிசா மாநிலம் தாமன்ஜோடியிலுள் டெல்லி பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி லலிதா பிரசிதா அண்மையில் பெற்றார்.

குறைந்த செலவில் காய்கறிகளை சுத்தம் செய்யும் திரவத்தைக் கண்டறிந்துள்ளார் லலிதா. இவர் தயாரித்த நீர் சுத்திகரிப்புக் கருவிக்காக அவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும் கிடைத்தது.

இந்த விருதைப் பெற்றதையொட்டி மத்திய அரசு, லலிதா பிரசிதாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி, வீணாகும் சோளத்தைக் கொண்டு இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் லலிதா பிரசிதாவுக்குப் பாராட்டு விழா ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு பரிசு, பாராட்டுப் பத்திரத்தை வழங்கினார்.

இதுபோன்ற இளம் விஞ்ஞானிகள் நாட்டுக்கு மிகவும் தேவை என்றும் விழாவில் அவர் வலியுறுத்தினார்.

English summary
Union Minister of State for Petroleum and Natural Gas Dharmendra Pradhan felicitating Lalita Prasida Sripada Srisai who won the impact qward at the Google Science Fair-2015 in Bhubaneswar.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia