உயர்கல்வி மாணவர்களுக்காக 1500 ஸ்போக்கன் டுடோரியல்கள் - மத்திய அரசு அறிவிப்பு

Posted By: Jayanthi

சென்னை, மார்ச் 17: உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவியரின் வசதிக்காக, தேசிய கல்வி அமைப்பின் தகவல் மற்றும் தொழில் நுட்ப பிரிவின் மூலம் 1500 ஸ்போக்கன் டுடோரியல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி மாணவர்களுக்காக 1500 ஸ்போக்கன் டுடோரியல்கள் - மத்திய அரசு அறிவிப்பு

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் இல்லாமல் எந்த நேரத்திலும் அந்த இடத்தில் இருந்தும் தாங்களே கற்கும் வகையில் டிஜிட்டல் முறையிலான கல்வி சாதனங்களை தேசிய கல்வி அமைப்பு(என்எம்இ) கொண்டு வருகிறது. தேசிய கல்வி அமைப்பின்(என்சிஇ) தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்( ஐசிடி) மூலம் இந்த டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வருகிறது. இந்த அமைப்பில் 810 வகையான பொறியியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் ஆன்லைன் மூலம் கிடைக்கும். கல்வி தொடர்பான கூட்டமைப்பின் சார்பில் இயங்கும் ஊடக மையங்கள் மூலம் 8 இ-கண்டெண்ட்டில் இளநிலை பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், 126 இணைய சோதனைக் கூடங்கள்(விர்ச்சுவல் லேப்) உருவாக்கப்பட்டுள்ளன. இவை 9 பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் 770 சோதனைகள் முறைகள் தயார் நிலையில் உள்ளன. அவற்றை உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இது தவிர 1500 ஸ்போக்கன் டுடோரியல்களும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஷன் டிசைன் படிப்பவர்களுக்காக நிறைய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வசதிகளை பெறுவதற்காக நாட்டில் 403 பல்கலைக் கழகங்கள் மற்றும் அதற்கு இணையான கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 1 ஜிபிபிஎஸ் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

English summary
The Union govt has announced 1500 spoken tutorials all over the country.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia