உயர்கல்விக்காக ரூ.1,000 கோடியில் நிதி ஏஜென்சியை உருவாக்குகிறது மத்திய அரசு!!

Posted By:

சென்னை: உயர்கல்விக்காக ரூ.1,000 கோடியில் நிதி ஏஜென்சியை உருவாக்குகிறது மத்திய அரசு.

இதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு உயர்கல்வி நிதி ஏஜென்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

உயர்கல்விக்காக ரூ.1,000 கோடியில் நிதி ஏஜென்சியை உருவாக்குகிறது மத்திய அரசு!!

பட்ஜெட் அறிவிப்பின் போது இத்தகவலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார்.

ரூ.1,000 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் இந்த ஏஜென்சியானது நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும். ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

இதன்மூலம் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி, ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டுகளை நம்மால் உருவாக்க முடியும் என்றார் அவர். மேலும் 62 நவோதயா பள்ளிகளை உருவாக்கவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Finance Minister Arun Jaitley during the Union Budget 2016 sessions announced the creation of a Higher Education Financing Agency (HEFA) with an initial capital base of Rs 1,000 crore which will leverage funds from the market and work to create infrastructure in India's top institutions like the IITs. In his budget speech, he also spoke about creating a regulatory architecture for 10 public and 10 private institutions to emerge as world-class teaching and research institutions.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia