நீயா குரங்கு..! நீயா சிங்கம்..! .. என்ன கொடுமை சரவணா...?

Posted By:

சென்னை : இன்றைய காலக்கட்டத்தில் நிறைய மாணவ மாணவியர்கள் என்ஜீனியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்களைப் பற்றிய வேடிக்கையான வாட்ஆப் கதை

போட்டி அதிகமாகக் காணப்படும் இன்றையக் காலக்கட்டத்தில் நன்றாகப்படிக்கும் மாணவ மாணவியர்களே நல்ல மார்க்குகளுடன் படிப்பை முடித்து நல்ல வேலையுடன் வெளியில் வருகின்றனர். ஆனால் சுமாராகப்படிக்கும் மாணவ மாணவியர்கள் சும்மாவே இருந்து விடுகிறார்கள்.

நல்லப் படிக்கின்ற மாணவர்கள் கேம்ப்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் என்ஜீனியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல வேலையில்லா மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அவர்களைப் பற்றிய வாட்ஆப் கதை.

என்ஜீனியரிங் மாணவர்கள்

என்ஜீனியரிங் கல்லூரியில் படித்து முடித்து கேம்பஸில் தேர்வு செய்யப்படாத மாணவர்கள் வேலைக்காக அலைந்து திரிகின்றார்கள். இது நாம் அனுதின வாழ்க்கையில் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி ஆகும். தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ தேர்வுகள் மற்றும் நேர்க்காணலைச் சந்திக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிலும் தோல்வியே பெரும்பாலும் கிடைக்கிறது.

ஏதாவது ஒரு வேலை

பின்னர் ஏதாவது ஒரு வேலைக் கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அனுதின வாழ்க்கையை நடத்துவதே அவர்களுக்கு பெரும்பாடாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு மாணவர் மிகவும் விரக்தியடைந்து இனி எந்த வேலைக் கிடைத்தாலும் பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்துபவரிடம் சென்று தனக்கு வேலை ஏதாவது இங்கு கிடைக்குமான எனக் கேட்கிறார்.

சர்க்கஸ் கம்பெனி

சர்க்கஸ் கம்பெனி நடத்துபவர் நீங்கள் படித்தப் படிப்பிற்கு தகுந்த வேலை இங்கு ஏதும் இல்லை எனக் கூறிவிட்டார். ஆனால் அந்த மாணவரோ நீங்கள் எந்த வேலையைக் கொடுத்தாலும் நான் செய்வேன் என்று கூறியதால் குரங்கு வேடம் போடுவதற்கு ஒருத்தர் தேவைப்படுகிறார். உங்களுக்கு இஷ்டம்னா அந்த வேலையில வேணும்னா சேர்ந்துக் கொள்ளுங்க என்று சர்க்கஸ் கம்பெனி நடத்துபவர் கூறினார்.

குரங்கு

அந்த மாணவர் குரங்கு வேடம் போட நான் தயாராக உள்ளேன் என கூறி சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்குச் சென்றார். நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. என்ஜீனியரிங் படித்துவிட்டு சர்க்கஸில் குரங்கு வேடம் போட்டு அனுதினமும் வரும் மக்களை மகிழ்ச்சிப் படுத்திக்கொண்டிருந்தார்.

சிங்கம்

ஒரு நாள் சர்க்கஸில் குரங்கு வேடம் அணிந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதத்தில் கூண்டிற்குள் இருந்த சிங்கம் வெளியே வந்து விட்டது. குரங்கின் அருகில் சிங்கம் வந்து விட்டது. இதைப்பார்த்த உடனே குரங்கிற்கு படபடவென வேர்த்தது. கையும் ஓடல காலும் ஓடல. ஒரே பயம்.,

ஆனால் பக்கத்தில் வந்த சிங்கம் என்ன சொல்லிச்சு தெரியுமா? டேய் குமாரு பயப்படாதடா நான் தான்டா சரவணா 2008 பேட்ஜ் மெக்கானிக்கல்டா எனக் கூறியது.

 

English summary
An unemployed engineer graduate was looking out for a suitable job in his stream. He attended several exams and many personal interviews only to be rejected.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia