உத்தரகண்ட் அரசில் காத்திருக்கிறது ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

Posted By:

டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த வேலைவாய்ப்புகளைப் பெற ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

உத்தரகண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுகேஎஸ்எஸ்எஸ்சி) இந்த தேர்வை நடத்துகிறது.

உத்தரகண்ட் அரசில் காத்திருக்கிறது ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

உதவி அக்கவுன்டன்ட், உதவி நடத்துநர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 643 வேலைவாய்ப்புகள் உத்தரகண்ட் மாநில அரசில் காலியாகவுள்ளன.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உரிய கல்வித் தகுதி, வயதுத் தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பை முடித்திருக்கவேண்டும்.

வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்கவேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர், விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 கட்டணமாக செலுத்தவேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்தினால் போதும்.

எழுத்துத் தேர்வு மூலம் ஆட்களை யுகேஎஸ்எஸ்எஸ்சி தேர்வு செய்யவுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் யுகேஎஸ்எஸ்எஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sssc.uk.gov.in/-ல் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 30 ஆகும்.

English summary
Uttarakhand Subordinate Service Selection Commission (UKSSSC) has invited applications for 643 Assistant Accountant, Assistant Conductor, Junior Assistant and various other posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia