முதுநிலைப் பட்டப்படிப்புக்கும் யுஜிசி ஸ்காலர்ஷிப் இருக்கு!

Posted By:

சென்னை: முதுநிலைப் படிப்பு பயிலும் மாணவ, மாணவ பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கல்வி உதவித் தொகைகளை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான கால அவகாசமும் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டப்படிப்புக்கும் யுஜிசி ஸ்காலர்ஷிப் இருக்கு!

இதற்கு முன்னர், இதற்கு ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான முதுநிலை தொழில்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம், ஒரே பெண் குழந்தைக்கான இந்திரா காந்தி முதுநிலைப் பட்ட கல்வி உதவித் தொகை திட்டம், பல்கலைக்கழக அளவில் இளநிலைப் பட்டப் படிப்பில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கான முதுநிலைப் பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசித் தேதியாகும்.

இந்தத் திட்டங்களின் கீழ், தேர்வு செய்யப்படுவோருக்கு முதுநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ள மாதம் ரூ. 3,100 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு www.ugc.ac.in என்ற இணையதளத்தை மாணவ, மாணவிகள் தொடர்புகொண்டு அறியலாம்.

English summary
Applying UGC scholarship for PG courses, deadline has been extended to september 30 this year. For more details students can logon into www.ugc.ac.in
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia