'திருச்சி சமஸ்கிருத பல்கலைக் கழகம் போலியானது'! - யுஜிசி வெளியிட்டுள்ள அதிரடி போலி பல்கலை. லிஸ்ட்!!

Posted By:

சென்னை: போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட போலி பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.

'திருச்சி சமஸ்கிருத பல்கலைக் கழகம் போலியானது'! - யுஜிசி வெளியிட்டுள்ள அதிரடி போலி பல்கலை. லிஸ்ட்!!

மாணவர்கள், பெற்றோர் ஏமாந்து போகாமல் இருக்கும் வகையிலும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்திலும் போலி பல்கலைக்கழகங்களைக் கண்டறிந்து அதன் பட்டியலை யுஜிசி வெளியிட்டு வருகிறது.

இதுபோல் இப்போது 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டது.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

பட்டியலில் இடம்பெற்றுள்ள போலி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள், முகவரி தவறு எனத் திரும்பிவந்துள்ளன.

இதனால், அந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வேறு முகவரியில் செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஏமாந்து போகும் நிலை உருவாகும்.

எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்பான தகவலையும் யுஜிசி-க்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் திருச்சியில் ஒரு போலி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்:

உத்தரப் பிரதேச மாநிலம்:

அலாகாபாத் மஹிளா கிராம வித்யா பீடம் மகளிர் பல்கலைக்கழகம்
அலாகாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஹிந்தி வித்யா பீடம்
கான்பூர் ஹோமியோபதி நேஷனல் பல்கலைக்கழகம்
அலிகரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம்
மதுராவில் உள்ள உத்தரப் பிரதேஷ் விஷ்வ வித்யாலயா
பிரதாப்கரில் உள்ள மஹாராணா பிரதாப் சிக்ஷா நிகேதன் விஷ்வ வித்யாலயா
நொய்டாவில் உள்ள இந்திரபிரஸ்த சிக்ஷா பரிஷத்
மதுராவில் உள்ள குருகுல விஷ்வ வித்யாலயா, விருந்தாவன்.

டெல்லி:
வாராணசி சம்ஸ்கிருத விஷ்வ வித்யாலயா
தரியாகஞ்ச் பகுதியில் உள்ள வணிகவியல் பல்கலைக்கழக நிறுவனம்
யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம்
வொக்கேஷனல் பல்கலைக்கழகம்
ஏடிஆர் சென்ட்ரிக் ஜுரிடிக்கல் பல்கலைக்கழகம்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங்.

தமிழகம்:

திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சம்ஸ்கிருத பல்கலைக்கழகம்.

பிகார்:

தர்பங்கா பகுதியில் உள்ள மைதிலி பல்கலைக்கழகம்.

கர்நாடகம்:

பெல்காமில் உள்ள படகான்வி சர்க்கார் வேர்ல்ட் திறந்தநிலை பல்கலைக்கழகம்.

கேரளம்:

கிஷநத்தத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்.

மத்தியப் பிரதேசம்:

ஜபல்பூர் கேசர்வானி வித்யா பீடம்.

மகாராஷ்டிரம்:

நாக்பூர் ராஜா அரபிக் பல்கலைக்கழகம்.

மேற்கு வங்கம்:

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேடிவ் மெடிசின்

English summary
The University Grants Commission, the apex body for higher education, on Wednesday published a list of fake universities in the country for the benefit of students. A total of 21 universities have been listed by the UGC. Eight of these 21 fake universities are in Uttar Pradesh (the highest in the country) while six others are in Delhi.Tamil Nadu, Karnataka, Kerala, Madhya Pradesh, Maharashtra, Bihar and West Bengal have one fake university each.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia