அனைத்து பல்கலையிலும் மாணவர் குறைதீர் மையம் அமைக்க யுஜிசி உத்தரவு

Posted By: Jayanthi

சென்னை: மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இணைய தள மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

அனைத்து பல்கலையிலும் மாணவர் குறைதீர் மையம் அமைக்க யுஜிசி உத்தரவு

பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் குறைகளை களைவதற்காக ஒவ்வொரு பல்கலைக் கழகமும் இணைய தள வசதியுடன் கூடிய குறை தீர் இணைப்புகளை உருவாக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடக்கும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து சேர்க்கைகளும் வெளிப்படையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் யுஜிசியும் பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இயைதடுத்து அனைத்து பல்கலைக் கழகங்களும் மாணவர் குறை தீர் இணையங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தெரிவிக்கும் புகார்களை கண்காணிக்க ஒவ்வொரு பல்கலைக் கழகத்துக்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். அவர் மூலம் மாணவர்கள் தெரிவிக்கும் பிரச்னைகள் பல்கலைக் கழகம் மற்றும் யுஜிசிக்கு எடுத்துச் செல்லப்படும்.

English summary
UGC has recommended to set up grievance cells in all universities.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia