உதவிப் பேராசிரியர் பணியில் சேர உதவுவதற்காக நெட் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான முதலாவது நெட் தகுதித் தேர்வு ஜுன் 16-ம் தேதி நடத்தப்படும் என தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) தற்போது அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களைப் பெற www.ugcnet.nta.ac.in என்ற இணையதள முகவரியை தேர்வு எழுத விரும்புவோர் தொடர்புகொள்ளலாம்.
தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test) அல்லது யுஜிசி நெட் அல்லது என்டிஏ-யுஜிசி-நெட் என்றும் அழைக்கப்படும் இந்த நெட் தேர்வு இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதியைத் தீர்மானிப்பதற்கான தேர்வாக அமைந்துள்ளது.
கல்லூரி ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் தேர்வாக இது இருப்பதால் மிகச் சிறப்பான முறையிலும், வெளிப்படையான நிர்வாக முறையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்தத் தேர்வினை பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவுடன் நடத்த தேசிய தேர்வு முகமை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த யுஜிசி நெட் தேர்வை ஜூலை 2018 வரை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்தது. 2018 டிசம்பர் முதல் இந்தத் தேர்வானது தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இணையவழியாக நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அரசு கல்லூரிகள், அரசு மானியம் பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி தகுதிக்காகவும், ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப்புக்காகவும் யுஜிசி 'நெட்' தகுதித்தேர்வு ஆண்டுக்கு 2 முறை (ஜுன், டிசம்பர் மாதங்கல்) நடத்தப்படுகிறது. இத்தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசிஃ சார்பில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான முதலாவது நெட் தகுதித் தேர்வு ஜுன் 16-ம் தேதி சிறப்பான முறையில் நடத்தப்படும் என்று தற்போது என்டிஏ அறிவிப்பு செய்துள்ளது. இதற்காக மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்பலாம். மாணவர்கள் செய்யவேண்டிய ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 10-ம் தேதி முடிவடைய உள்ளது. மொத்தம் 83 பாடங்களுக்காக நடத்தப்படும் நெட் தேர்வுக்கு முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தேர்வு கட்டணம் ரூ.1,150 ஆகும். ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ரூ.600 செலுத்தினால் போதுமானது.
அதேநேரத்தில் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.325 கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மே மாதம் 10-ம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளன.
என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












