சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 1-ம் தேதி கடைசி நாள் என அறிவி்க்கப்பட்டுள்ளது.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்கள், இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களில் அமர இந்த யுஜிசி நெட் தேர்வு உதவுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வழங்குகிறது.
இந்தத் தேர்வு 2-வது முறையாக டிசம்பர் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 1-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பங்களை நிரப்புவது, ஸ்கேன் செய்த கையொப்பத்தை அப்லோட் செய்வது, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவது, செலுத்தியதை உறுதிப்படுத்துவது என 4 கட்டங்களாக இந்த விண்ணப்பப் படிவ விஷயம் உள்ளது.
இந்த தேர்வு 3 தாள்களாக நடைபெறும். 83 பாடங்களிலிருந்து கேள்விகல் கேட்கப்படும். நாடு முழுவதும் 88 தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் தேர்வுகளை யுஜிசி நடத்தவுள்ளது. முதல் 2 தாள்கள் தலா 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். 3-வது தாளானது 150 மதிப்பெண்கள் கொண்டதாக அமையும். மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு cbsenet.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












