நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...! மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....!!

Posted By:

டெல்லி: நாட்டில் போலியாக 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக ராஜ்யசபையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவையில் அவர் தெரிவித்ததாவது: நாட்டில் போலியாக செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) கேட்டுக்கொண்டோம். அதன்படி யுஜிசி அளித்த பட்டியலில் நாடு முழுவதும் 22 பல்கலைக்கழங்கள் போலியாக செயல்பட்டு வருவதை அறிந்துள்ளோம்.

நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...! மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....!!

அந்த பல்கலைக்கழகங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதில் 9 போலி பல்கலைகக்ழகங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.

மேலும் டெல்லியில் 5 போலி பல்கலைக்கழங்களும், மேற்கு வங்கத்தில் 2 பல்கலை.யு,ம், பிகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரம், தமிழகம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலை.யும் போலியாக செயல்பட்டு வருகின்றன.

இந்த விஷயத்தில் மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கேற்ப உரிய உத்தரவுகளை நாங்கள் பிறப்பித்துள்ளோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

English summary
About 22 fake universities are functioning in the country against whom the states have been asked to initiate action, the government told Rajya Sabha. There are maximum of 9 fake universities in Uttar Pradesh and 5 in Delhi. HRD Minister Smriti Irani stated that the ministry is drafting a letter to Ministry of External Affairs asking to list out all fake universities/ institutions abroad in order to act on injustices meted out to our students. "As per information available with the UGC, there are 22 universities (in the country) which have been listed in the UGC list of fake universities and are functioning in contravention or violation of the UGC Act, 1956 in different parts of the country," Irani said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia