கல்வி நிறுவன வளாகங்களில் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு தடை வதிக்க வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டத்தை கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இந்த சிகரெட் உற்பத்தி மற்றும் விநியோகம் தடை செய்யப்பட்டது.
தற்போது இந்த இ-சிகரெட் பயன்பாடு குறித்து யுஜிசி சார்பில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. . அதில் கூறப்பட்டிருப்பதாவது
இ-சிகரெட்டை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால் இதய பாதிப்புகள், மூச்சு தொடர்பான உபாதைகள் மட்டும் ஏற்படுவதோடு மூளையும் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதுபோன்ற காரணங்களினால் சமீபத்தில் இந்தியாவில் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
எனவே, அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் அதன் வளாகங்களில் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதோடு, இதுகுறித்தான விழிப்புணர்வையும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த அறிவுறுத்தலைப் பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












