உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்வம் மிக்க ஆசிரியர்கள், பாட நூல்களைப் புதிதாக எழுத வரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது, 12 இந்திய மொழிகளில் இளநிலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்வம் மிக்க ஆசிரியர்கள், பாட நூல்களைப் புதிதாக எழுத வேண்டும் என்று யுஜிசி தற்போது அழைப்பு விடுத்துள்ளது. ஆர்வமுள்ள நபர்களும் ஆசிரியர்களும் இதற்காக ஜனவரி 30 விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை படிப்புகளுக்கான கலை, அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் புத்தகங்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 12 மொழிகளில் எழுத விருப்பம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்
இதற்காக உயர்க்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்டோருக்கு யு.ஜி.சி. அழைப்பு விடுத்துள்ளது.

புதிய தேசிய கல்வி கொள்கையின் வாயிலாக இந்திய மொழிகளில் கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் மூத்த
அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இளங்கலை படிப்புகளுக்கான கலை, அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் புத்தகங்களை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது, பெங்காலி, மராத்தி, அசாமிஸ் ஆகிய 12 இந்திய மொழிகளில் வழங்க யு.ஜி.சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களில், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை இம்மாதக் கடைசிக்குள் அனுப்பவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புத்தகங்கள் எழுத விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் விரும்பும் பாடப்பிரிவு, மொழி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு வரும் 30ம் தேதிக்குள், https://www.ugc.gov.in/Notices என்ற தளத்தில்
விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தெரிவித்து உள்ளது.
கூகுள் படிவ இணைப்பு: https://forms.gle/cABbivfPB6hvfFhB9 மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications












