தமிழகத்தில் 2 பல்கலை.யில் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் ரத்து.. எதுன்னு தெரியுமா

Posted By:

டெல்லி : தமிழகத்தில் 2 பல்கலைக்கழகங்களில் தொலை தூர வகுப்புகளை நடத்துவதற்கான அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு நீட்டிக்கவில்லை.

தொலை நிலை வகுப்புகள் அங்கீகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 5 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் 2 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம் நீட்டிக்கப்படவில்லை.

தமிழகத்தில் 2 பல்கலை.யில் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் ரத்து.. எதுன்னு தெரியுமா

அங்கீகரிக்கப்பட்ட கல்வி் நிறுவனங்கள் பட்டியலை சரி பார்த்து பின்னர் மாணவர்கள் அதில் சேருமாறும் யுஜிசி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார் சபா மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் நீட்டிக்கப்படவில்லை. 3 நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (2016-17 டூ 2017-18)
2. தமிழ் பல்கலைக்கழகம் (2016-17 டூ 2017-18)
3. தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார் சபா (2016-17)
4. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (2015-16)
5. சாஸ்திரா பல்கலைக்கழகம் (2016-17 டூ 2017-18)

இதுதொடர்பான விவரங்களை கீழ்க்கண்ட இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

http://www.ugc.ac.in/deb/notices.html
http://www.ugc.ac.in/ugc_notices.aspx

அதேபோல அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலை இதில் போய்ப் பார்க்கலாம்:

http://www.ugc.ac.in/deb/pdf/Recognition%20for%202016-17-%20DEB.pdf

English summary
UGC Distance Education Bureau has released Recogniton for Academic year 2016-17 and onward. The students and parents are requested to take admission in the approved programmes and in approed institutions only. It is also advised that before taking admission kindly go through the terms and conditions as given in the recognition letter and also various notices issued by UGC.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia