டெல்லி: மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களை ஏற்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இன்ஸ்டிடியூட்டுகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

அனைத்து பல்கலைக்கழகங்களும், மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களை ஏற்படுத்தவேண்டும். மாணவர்கள், பெற்றோர் எழுப்பும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாக இந்த ஹெல்ப்லைன் இருக்கவேண்டும். மாணவர் சேர்க்கை முடியும் வரை இந்த ஹெல்ப்லைன்கள் செயல்படவேண்டும். மாணவர்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாத வகையில் இந்த ஹெல்ப்லைன்கள் செயல்படவேண்டும்.
மாணவர் சேர்க்கையில் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்ற அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக் கடிதத்தை யுஜிசி மானியக் குழு செயலர் ஜஸ்பால் சாந்து, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications












