சிபிஎஸ்இ-யின் கம்ப்யூட்டர் படிப்பை படித்தவர்கள் இனி பட்டப்படிப்பில் சேரலாம்: யுஜிசி

Posted By:

சென்னை: சிபிஎஸ்இ பாடத் திட்டம் வழியாக பிளஸ்-1, பிளஸ்-2 வில் கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்கள் இனி பட்டப்படிப்பில் சேரத் தடையில்லை என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2-வில் கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்கள் பட்டப்படிப்பில் சேர முடியாது என சில பல்கலைக்கழகங்கள் அறிவித்திருந்தன. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேட்டிக்ஸ் பிராக்டீஸ், மல்ட்டிமீடியா, வெப் டெக்னாலஜி படித்தவர்கள் பட்டப் படிப்பில் சேர்வதற்கு சில பல்கலைக்கழகங்கள் தடை விதித்திருந்தன. இதனால் இந்தப் படிப்பு படித்த மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்வதில் சிரமம் இருந்தது.

சிபிஎஸ்இ-யின் கம்ப்யூட்டர் படிப்பை படித்தவர்கள் இனி பட்டப்படிப்பில் சேரலாம்: யுஜிசி

இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் விதமாக அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மேற்கண்ட படிப்பைப் படித்தவர்களை பட்டப்படிப்பில் சேர்க்க யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கையை யுஜிசி அனுப்பியுள்ளது.

அந்தப் படிப்புகளையும் அங்கீகரித்து மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்க்க ஆவன செய்யவேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னைத் தீர்வு காணுமாறு யுஜிசிக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று யுஜிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Many students who have studied Informatics Practices in Class 12 have been facing troubles while taking admissions to undergraduate programmes. To put an end to this, University Grants Commission (UGC) has asked universities to recognise the CBSE-offered computer programmes from the upcoming session. "CBSE offers three computer-based courses to students of classes 11 and 12-Computer Science, Informatics Practices and Multimedia and Web Technology.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia