அங்கீகாரம் இல்லாத பல்கலை. வளாகங்களை இழுத்து மூடுங்கள்: யுஜிசி அதிரடி

Posted By:

சென்னை: அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழக வளாகங்களை இழுத்து மூடுமாறு 10 பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை மீறி இந்த பல்கலைக்கழக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அவற்றை மூடுமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமெண்டல் ரிசர்ச் ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிடியூட், புவனேஸ்வரர் நர்சி மான்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெணட் ஸ்டடீஸ்(என்எம்ஐஎம்எஸ்) யுனிவர்சிட்டி, பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிஐடிஎஸ்), பிலானி பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மெஸ்ரா இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ், தன்பாத் பனஸ்தாலி பல்கலைக்கழகம்(ராஜஸ்தான்), பொன்னையா ராமானுஜம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, இந்தியன் வெட்டனரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (ஐவிஆர்ஐ), தி லஷ்மிபாய் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் பிஸிக்கல் எஜுகேஷன் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான உத்தரவை யுஜிசி மானியக் குழு துணைச் செயலர் சுனிதா சிவாச் பிறப்பித்துள்ளார்.

இந்த வளாகங்களை அகற்றியதுதொடர்பாக ஒரு மாதத்துக்குள் யுஜிசி-க்கு அறிக்கை தரவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இதுதொடர்பாக தங்களுக்கு எந்த உத்தரவுக் கடிதமும் வரவில்லை என்ரு ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிடியூட் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.பி. குரோவர் தெரிவித்துள்ளார். யுஜிசி-யின் நடவடிக்கை எங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது. இதுதொடர்பாக எங்களுக்கு இதுவரை எந்த உத்தரவுக் கடிதமும் வரவில்லை என்றார் அவர்.

English summary
University Grants Commission (UGC) has directed ten institutions to immediately shut down their off-campus centres, saying these are "unauthorised" and have been set up against the rules. The list of institutions put on notice are: Tata Institute of Fundamental Research Homi Bhabha National Institute, Bhubaneswar Narsee Monjee Institute of Management Studies (NMIMS) University Birla Institute of Technology & Science (BITS), Pilani Birla Institute of Technology, Mesra Indian School of Mines Dhanbad Banasthali University (Rajasthan) Ponnaiyah Ramajayam Institute of Science and Technology (PRIST) Indian Veterinary Research Institute (IVRI) in Uttar Pradesh The Lakshmibai National University of Physical Education (LNIPE) in Gwalior University Grants Commission (UGC) Deputy Secretary Sunita Siwach on November 9, 2015 issued notices to these ten institutions, pointing out that the off-campus centres set up by them have been established in violation UGC guidelines.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia