அண்ணா பல்கலைக் கழகத்திற்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து எம்பிஏ உள்ளிட்ட தொலைநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்களில் தொலைநிலைக் கல்வி முறைகளை வரைமுறைப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை யுஜிசி நிர்வாகம் சமீபத்தில் அமல்படுத்தியது. இதில், தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று அடிப்படையில் 3.46 மதிப்பெண் புள்ளிகள் பெற்றுள்ள அண்ணா பல்கலைக் கழகம், யுஜிசி-யின் புதிய கட்டுப்பாடுகளில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் பெற்று அங்கீகாரம் பெற முழுத் தகுதியும் பெற்றது.
இதன் அடிப்படையில், பல்கலைக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும், எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட மூன்று தொலைநிலைக் கல்விக்கும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து தற்போது மேற்குறிப்பிட்ட மூன்று படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கையினை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












