யூகோ வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: யூகோ வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் மார்ச் 19-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 5 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டவற்றில் 5 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும். வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.

யூகோ வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்!!

நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை வங்கிக் குழு பரிசீலித்து ஆட்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும்.

விண்ணப்பங்களை மார்ச் 19-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களுக்கு https://www.ucobank.com என்ற யூகோ வங்கியின் இணையதளத்தைக் காணலாம்.

English summary
UCO Bank invited applications for 5 Security Officer Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 19 March 2016. UCO Bank Vacancy Details Total Number of Posts: 5 Name of the Post: Security Officers Eligibility Criteria Educational Qualification: Graduate in any discipline from a recognized University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia