யூகோ வங்கியில் ஆடிட்டர்களுக்கு வேலை ரெடி...!

Posted By:

சென்னை: யூகோ வங்கியில் சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் படித்த ஆடிட்டர்களுக்கு வேலை தயாராக இருக்கிறது.

இதுதொடர்பான அறிவிப்பையும் யூகோ வங்கி வெளியிட்டுள்ளது. சுமார் 100 பணியிடங்கள் காத்திருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 20-ம் தேதிக்குள் விண்மப்பிக்கவேண்டும்.

யூகோ வங்கியில் ஆடிட்டர்களுக்கு வேலை ரெடி...!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ. படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் அதுதொடர்பான தொழில்முறை தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

நிர்வாகம் நடத்தும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆட்ள் தேர்வு செய்யப்படுவர்.

வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். விண்ணப்பிப்பவர்கள் வங்கியின் இணையதளத்துக்குச் சென்று இ-அப்ளிகேஷனைத் டவுன்லோடு செய்து, அதில் போட்டோவை ஒட்டி, தேவையான ஆவணங்ளுடன் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்கள் நவம்பர் 20-க்குள் அனுப்பப்படவேண்டும்.

மேலும் தபாலில் வரும் விண்ணப்பங்கள் வந்து சேர நவம்பர் 27 கடைசி நாளாகும்.

யூகோ வங்கியானது 1943-ல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
UCO Bank invited applications for 100 posts of Chartered Accountant in MMGS II who should be Chartered Accountant for their utilization in the area of Treasury/Credit/International Banking/Loan syndication/Inspection/Risk Management etc. as per the need of the Bank. The candidates eligible for the post can apply online on or before 20 November 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia