பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலை.யில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். கல்வி இயக்குநர், பதிவாளர், ஆராய்ச்சி இயக்குநர், விரிவாக இயக்குநர், பி.ஜி. படிப்புகளுக்கான டீன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் படிப்புகளுக்கான கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக இணையதளமான www.uasbangalore.edu.in-ல் கிடைக்கும்.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலை.யில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் இந்தப் பணிகளுக்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஓபிசி, பொதுப் பிரிவினருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம்வசூலிக்கப்படும்.

தபால் மூலம் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை the Administrative Officer, University of Agricultural Sciences, GKVK, Bengaluru - 560 065 என்ற முகவரிக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

English summary
University of Agricultural Sciences (UAS), Bengaluru invited applications for the posts of Director of Education and other posts for the various Depts. The eligible candidates can apply to the post through the prescribed format so as to reach on or before 15 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia