பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலை.யில் பணியிடங்கள் காலி!!

Posted By:

டெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (யுஏஎஸ்) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேராசிரியர், நூலகர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலை.யில் பணியிடங்கள் காலி!!

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 16-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பேராசிரியர் பணியிடங்கள் 30-ம், இணை பேராசிரியர் பணியிடங்கள் 16-ம், நூலகர் பணியிடம் ஒன்றும், உதவி பேராசிரியர் பணியிடங்கள் 58-ம் காலியாகவுள்ளன.

தகுதியுள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

அனைத்துப் பணியிட விண்ணப்பங்களுக்கும் கட்டணம் உண்டு. நேர்முகத் தேர்வு மூலம் அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை மே 16-ம் தேதிக்குள் The Administrative Officer, University of Agricultural Sciences, GKVK, Bengaluru: 560065 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.uasbangalore.edu.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
University of Agricultural Sciences (UAS), Bengaluru has released a notification on the recruitment happening. UAS, Bengaluru is looking out for 105 librarian, Professor, Associate Professor and Assistant Professor posts. Age Limit: The candidates should be minimum of 18 years of age. Application Fee: For Professor/Associate Professor (General): Rs.1000/- For Professor/Associate Professor(SC/ST): Rs.700/- For Librarian (General): Rs.1500/- For Librarian (SC/ST): RS.1000/- For Assistant Professor (General): Rs.750/- For Assistant Professor (SC/ST): Rs.500/-

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia