இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானி யுஆர்.ராவ் மற்றும் இஸ்ரோ வளர்ச்சியும்

Posted By:

இந்தியாவின் பழம்பெரும் விஞ்ஞானி யு ராமசந்திர ராவ் அவர்கள் இன்று காலை இறந்தார் மார்ச் 10 1932 ஆம் நாள் கர்நாடகாவில் அடமாரு என்னும் கிராமத்தில் பிறந்தார். ஆரம்பகல்வியை அங்கேயே முடித்தார். முன்னாள் இஸ்ரோவின் தலைவராக இருந்த யு.ஆர்.ராவ் என்று அழைக்கப்படும் யு.ராமசந்திர ராவ் அவர்கள் தன்னுடைய இளங்கலை பிஎஸ்சி பட்டதாரி படிப்பை சென்னை பல்கலைகழகத்தில் பயின்றார் அத்துடன் பனாரசில் 1954 முதுகலை பட்டம் பெற்றார் மற்றும் 1960இல் குஜாராத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றார். விகரம் சாராபாய் அவர்களின் கீழ் பணியாற்றிய ராவ் அவர்கள் சோலார் காஸ்மிக் வே, ஜியோ மேக்னட்டிஸ் போன்ற பல்வேறு தொழில்நுட்ப கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தியுள்ளார் .

இந்திய விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சியும் அதில் பங்காற்றி மறைந்த முன்னால் விஞ்ஞானியும் யுஆர். ராவும்

யு ஆர்.ராவ் மற்றும் இஸ்ரோ சாதனை :

1972 சேட்டிலைட் தொழிநுடபத்தை வடிவெடுக்கும் பொறுப்பேற்றார் . இவரின் மாபெரும் வழிகாட்டலின் படி 1975இல் ஆர்யப்பட்டா ஏவப்பட்டது . மேலும் யு ஆர்.ராவ் அவர்களின் வழிகாட்ட்டுதலின் படி பாஸ்கரா, ஆப்பிள், ரோகிணி, இன்சாட்1, இன்சாட் 2 உட்ப்பட பல்வேறு கட்டமைப்புகள் செய்துமுடிக்கப்பட்டன. பெருமை வாய்ந்த பெயரை இந்தியா அகில உலக அளவில் பெருவதற்கு இவருடைய பங்களிப்பு பெரும் அளவில் இருந்தது.

 இந்தியாவின் ராகெட் தொழில்நுட்பத்துடன் ஏவப்பட்ட ஏஎஸ்எல்வி ராகெட் தெளிவுப்பட விளக்கினார் மற்றும் அத்துடன் 1980இல் பிஎஸ்எல்வி 850கிலோ மேம்பாட்டில் பங்கு வகுத்தார் . அத்துடன் 1991 ஜிஎஸ்எல்வி மேப்பாட்டுடன் கிரையோஜெனிக் தொழில்நுட்ப மேம்பாடு அடைந்தது . இன்சாட் வழங்கிய தொலைதொடர்பு வசதிகள் அனைத்து ஊரக மேம்பாட்டையும் அங்கிகரித்தது. எஸ்டிடி போன்ற சேவைகளை திறம்பட மக்கள் பெற உதவிகரமாக இருந்தார் . இவருடைய ஆரம்பகாலத்தில் கிடைத்த வசதிகள் புதிது ஆனாலும் ஆர்யபட்டா முதல் இன்சாட் வரை நம்மை பெருமைப்படுத்திய இஸ்ரோவின் சாதனையில் யு. ராமசந்திரராவ் அவர்களின்  பங்களிப்பு இன்றியமையாதது ஆகும் . இன்று உலகளவில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா ஜொலிக்கின்றதென்றால் அவற்றில் யு.ராவ் அவர்கள் முக்கிய காரணமாவார். இன்றைய இளைஞர்கள் இதனை உணர முடியும் வருங்கால இளைஞர்களின் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் வித்திட்ட பெருமை அவரையேசாரும்

English summary
here article tell about UR.Rao and Isro development of India

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia