தமிழ்நாடு குடிநீர் விநியோக வாரியத்தில் காத்திருக்கும் உதவி பொறியாளர் பணியிடங்கள்...

Posted By:

சென்னை: தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்தில் (டிவாட்) 100 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊதியம் ரூ.9300-34800 பிளஸ் 5,100 என்ற விகிதத்தில் இருக்கும்.

தமிழ்நாடு குடிநீர் விநியோக வாரியத்தில் காத்திருக்கும் உதவி பொறியாளர் பணியிடங்கள்...

இந்தப் பணியிடத்தில் சேருவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ பொறியியல் படிப்பில் டிகிரி முடித்திருக்கவேண்டும்(சிவில் அல்லது மெக்கானிக்கல்). இதே பிரிவில் பி.ஜி. டிகிரி முடித்தவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும். பப்ளிக் ஹெல்த் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும்.

பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது சுயவிவரத்தை சான்றிதழ்களுடன் இணைத்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனுப்புதல் நலம்.

1971-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது டிவாட் வாரியம். சென்னை மாநகராட்சியைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது டிவாட்.

English summary
Tamil Nadu Water Supply and Drainage Board invited applications for the posts of Assistant Engineer in Engineering Service. The eligible candidates can apply online to the post through the prescribed format along with other necessary documents on or before 31 October 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia