சென்னை: திருவாங்கூர் டைட்டானியம் புராடக்ட்ஸ்(டிடிபி) நிறுவனத்தில் பிராஸஸ் ஆப்பரேட்டர் டிரைனி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இந்தியாவில் டைட்டானியம் டை-ஆக்ஸைடு தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது டிடிபி நிறுவனம். 1946-ம் ஆண்டில் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். கொல்லம் பகுதியிலுள்ள கடற்கரையிலிருந்து டைட்டானியம் டை-ஆக்ஸைடு கிடைக்கிறது. அதை உற்பத்தி செய்து பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது டிடிபி.
இந்த நிறுவனத்தில் துணை தலைமை என்ஜினீயர், தலைமை மருத்துவ அதிகாரி, பாய்லர் அட்டெண்டண்ட், எலக்ட்ரிக்கல் வைண்டர், பிராஸஸ் ஆப்பரேட்டர் டிரைனி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பலாம்.
வயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை http://www.travancoretitanium.com-ல் என்ற இணையதளத்தில் பெற முடியும்.


Click it and Unblock the Notifications
