தெலங்கானா காவல்துறையில் குவியும் வேலைவாய்ப்புகள்!!

Posted By:

சென்னை: தெலங்கானா மாநில காவல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. சுமார் 9,231 பணியிடங்களை காவல்துறை நிரப்பவுள்ளது.

இதற்கான பணிகளை தெலங்கானா மாநில அளவிலான காவல்துறை நியமன வாரியம்(TSLPRB) செய்யவுள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தெலங்கானா காவல்துறையில் குவியும் வேலைவாய்ப்புகள்!!

மொத்தம் 9,281 பணியடங்கள் காலியாகவுள்ளன. கான்ஸ்டபிள், ஆயுதப் படை, கேடட் டிரைனி, பெண் போலீஸ், சிறப்புப் பாதுகாப்புப் படை, ஃபயர்மேன் என பல பிரிவுகளில் ஆல் சேர்க்கப்படவுள்ளது.

இதில் ஃபயர்மேன் பதவி தவிர மற்ற பணியிடங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 25-க்குள் இருக்கவேண்டும். ஃபயர்மேன் பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதுக்குள் இருக்கலாம். ஓசி, பிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இது ரூ.200-ஆக இருக்கும்.

தேர்வு தொடர்பான விவரங்கள் TSLPRB இணையதளத்தில் வெளியிடப்படும். அனைத்து விண்ணப்பங்களும் பிப்ரவரி 4-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு TSLPRB இணையதளமான www.tslprb.in-ல் அறியலாம்.

English summary
Telangana State Level Police Recruitment Board (TSLPRB) invited applications for 9281 Constable, Firemen & SCT Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 04 February 2016. Details in this regard can be found from the official website. Result of TSLPRB Constable, Firemen & SCT Posts 2016 Details in this regard can be found from the official website. Important Date: Starting Date for Submission of Application: 11 January 2016. Last Date of Submission of Application: 04 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia