Unemployment Assistance Scheme: 'நோ ஒர்க் டோன்ட் பீல் திருச்சி யூத்ஸ்'...!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.09.2022 அன்றைய தேதியில், ஐந்து ஆண்டு முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று, பத்தாம் வகுப்பு நேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு (+2), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப் படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து, 30.09.2022 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்து பதிவுதாரர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை...!

ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம்

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை.

பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இந்த்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் வழங்கிவரும் உதவித்தொகை விவரம்:

பொதுப்பிரிவினர் (காலாண்டிற்கு ஒருமுறை)

பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை(SSLC-Failed) - ரூ.200/

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு( SSLC-Passed) - ரூ.300/

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed)- ரூ.400/

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) - ரூ.600/

வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை...!

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்

எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு - ரூ.600/

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed) - ரூ.750/

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) - ரூ.1000

(சிறப்பு நேர்வாக மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மாதந் தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது)

ஆவணங்கள் என்னென்ன

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்று சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து, விண்ணப்பப்படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.

முகக்கவசம் அவசியம்

அலுவலகத்திற்கு வருகைதரும் பதிவுதாரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, முகக்கவசம் அணிந்து வருவது மிகவும் அவசியமாகும்.

ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல் மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற் கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Scholarship for unemployed youth: It has been announced that the youth can apply and benefit under the scheme of providing scholarship for unemployed youth.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X