சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி!

Posted By:

சென்னை: சென்னையிலுள்ள மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மதிப்பெண்களைப் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், வகுப்புகளை நடத்தி உற்சாகப்படுத்தி வருகிறது மாநகராட்சி.

சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி!

அதைப் போலவே மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியை நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் முறைகளில் நவீனத் திறன், ஆங்கிலம் பேசுதல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்க முடிவு செய்தது.

இதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசிரியர்கள் வந்து பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலர் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளனர்.

இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்று வருகின்றனர். இந்த பயிற்சிகள் சில காலத்துக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
Training programme for Chennai corporation school teachers has been arranged by Corporation Management. Hundreds of teachers were participated in this training programme.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia