10ம் வகுப்பு தேர்வு நாளை முதல்.. 10 லட்சம் மாணவர்கள் ரெடி!

Posted By:

சென்னை : நாளை தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9,94,167 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களில் 4,98,383 மாணவர்களும், 4,95,784 மாணவிகளும் தேர்வினை எழுத உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர 39,741 தனித்தேர்வாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

10ம் வகுப்பு தேர்வு நாளை முதல்.. 10 லட்சம் மாணவர்கள் ரெடி!

மேலும் வேலூர், கடலூர் மற்றும் பல்வேறு புழல் சிறையில் உள்ள 224 சிறைக் கைதிகளும் தேர்வினை எழுத உள்ளார்கள். சிறைக் கைதிகளுக்கு சிறையிலேயே தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறையிலேயே செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஏதேனும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51,658 மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 209 தேருவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா தெரிவித்துள்ளார்.

English summary
school education department has announced tomorrow will start the 10th public exam. write this exam 10 lakh students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia