கால்நடை மருத்துவப் படிப்பு விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய நாளை கடைசி நாள்...!!

Posted By:

சென்னை: கால்நடை விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய நாளை (ஜூன் 10) கடைசி நாளாகும்.

ஐந்தரை ஆண்டு காலம் படிக்க வேண்டிய கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.

கால்நடை மருத்துவப் படிப்பு விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய நாளை கடைசி நாள்...!!

இந்த பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேரடி விண்ணப்ப விநியோக முறையை கால்நடை பல்கலைக்கழகம் ரத்து செய்துவிட்டது.

ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்நிலையில் மே 20-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்தப் படிப்புகளுக்காக இன்று வரை (ஜூன் 8) 17,152 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 16 ஆயிரம் பேர் இந்தப் படிப்புகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பங்களை ஜூன் 10-ஆம் தேதி மாலை 6 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 17-ஆம் தேதி கடைசியாகும்.

எனவே இந்தப் படிப்புக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பங்களை உடனடியாக டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.

English summary
Tamilnadu veterinary science university officials said that the last date for downloading application to apply B,V.sc courses is june 10. For more details students can logon into www.tanuvas.ac.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia