பள்ளி, கல்லூரி நாட்கள் எப்போதும் நினைவில் இருந்து அழியாத கோலம் என்பதை, நாம் அனைவரும் அறிவோம்...!
குறிப்பாக, பள்ளி முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

வாழ்க்கை நமக்கு என்ன பாடத்தை கற்று தர போகிறது என்பதை தீர்மானிக்கும் கல்லூரி நாள்கள் முக்கியம் தானே...!
ஆகையால் உடனே போய் கல்லூரியை தேர்வு செய்யும் பணியை ஸ்டார்ட் பண்ணுங்க ப்ரோ...! இன்று கடைசி நாள் பாஸ்...!
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன.
இதற்கானமாணவர் சேர்க்கை இணையவழயில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கியது.
4 லட்சம் பேர்
இதுவரை, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனர். அதில், 2.94 லட்சம் பேர் வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். முதன்முறையாக, கலை, அறிவியல் சேர்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தை கடந்துள்ளது.
இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளை நிரப்புவற்கான சேர்க்கை பதிவும்,
கடந்த ஜூன் 20-ல் தொடங்கியது. ஜூலை 26ம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 2 லட்சத்து 7,361 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.63 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இன்று கடைசி
மேலும், 1.49 லட்சம் பேர் அசல் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர். இதற்கிடையே பொறியியல், கலை, அறிவியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் இன்றுடன் (ஜூலை 27) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் வேகமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதேநேரம், பொறியியல் படிப்புக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய, ஜூலை 29-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. 'நாட்டா' தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பி.ஆர்க் படிப்புளில் சேர தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என, உயர்கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












