அண்ணா பல்கலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்றே கடைசி..!

Posted By:

சென்னை : என்ஜினீயரிங் படிப்பிற்கு மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்த்தை பதிவு செய்ய மே 31ந் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவம் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து சேர ஜூன் 3ந் தேதி இன்று கடைசி நாளாகும்.

2017 - 2018ம் கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்வதற்கு எந்த வித நுழைவுத் தேர்வும் கிடையாது.

கடந்த ஆண்டு போலவே பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

அண்ணா பல்கலை விண்ணப்பம்

கடந்த மாதம் மே 12ந் தேதி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்தனர். சிலர் பிளஸ்2 தேர்வு முடிவு வெளிவந்த பிறகு ஆன்லைனில் மதிப்பெண்களை பதிந்தனர்.

விண்ணப்பம் வந்து சேர இன்று கடைசி நாள்

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணாபல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3ந் தேதி இன்று கடைசி நாள். கடந்த ஆண்டு வரை விண்ணப்ப கட்டணம் டி.டி. எடுத்து அனுப்பப்பட்டது. ஆனால் இந்த வருடம் முதல் ஆன்-லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும. அவ்வாறு பலர் பணம் செலுத்தி வருகிறார்கள்.

1.5 லட்சம் விண்ணப்பங்கள்

1.5 லட்சம் பேர் இதுவரை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் 1லட்சம் பேர் குறைவாக விண்ணப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிரம்பாத இடங்கள் நிறைய இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிரம்பாத இடங்கள்

இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் தமிழநாடு கால்நடை மருத்துவ படிப்பில் சேரவும் கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேரவும் மாணவ மாணவிகளிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேருவதற்கும் மாணவர்களிடையே ஆர்வம் குறைவாகக் காணப்படுகிறது. போன வருடத்தை விட இந்த வருடம் 1லட்சம் பேர் குறைவாகவே பொறியில் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இதனால் நிரம்பாத இடங்கள் நிறைய இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Up to 1.5 lakh students have been registered for engineering course at Anna University. This year more than 1 lakh people have applied less than last year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia