எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்- இதுவரை 35,000 விண்ணப்பங்கள் விற்பனை

Posted By:

சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்விற்காக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதில் 24 ஆயிரம் விண்ணப்பங்கள் கடைசி நாளான நேற்று பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவகல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவகல்லூரிகளில் 2,555 இடங்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக உள்ளன.

2 ஆயிரம் இடங்கள்:

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 383 இடங்கள் போக, மீதம் உள்ள 2 ஆயிரத்து 172 இடங்கள் தமிழகத்தின் ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி இடங்களும் அரசு ஒதுக்கீட்டுக்கு வருகிறது.

மாணவர்கள் சேர்க்கை:

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவகல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. சுயநிதி மருத்துவகல்லூரிகள் 13 உள்ளன. அவற்றில் 8 மருத்துவகல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதி உள்ளது.

பல் மருத்துவக் கல்லூரிகள்:

18 சுயநிதி பல்மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம்:

இந்தநிலையில் 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் கொடுக்கும் பணி கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது.

நேற்றுடன் நிறைவு:

விண்ணப்பம் வழங்கும் பணியினை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவகல்லூரி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களாக நடந்து வந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது.

அதிகளவில் விற்பனை:

கடைசி நாளான நேற்று விண்ணப்பங்கள் விற்பனை எதிர்பார்த்தபடி அதிகமாகவே இருந்தது. இதுவரை தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

24 ஆயிரம் விண்ணப்பங்கள்:

இதில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

விற்பனை அமோகம்:

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதுவரை 35 ஆயிரத்து 667 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இன்றே கடைசி நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட 24 ஆயிரத்து 115 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு 29 ஆம் தேதியான இன்று கடைசி நாள்.

தரவரிசை பட்டியல் வெளியீடு:

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவு வெளியானபிறகுதான் தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியையும், கலந்தாய்வு தொடங்கும் தேதியும் முடிவு செய்ய முடியும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
24 thousand MBBS applications submitted till yesterday. Today is the last date for application submission.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia