ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் முடிந்தது

Posted By:

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.

ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் பட்டதாரிகள் மொத்தம் 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பப்படிவத்தினை பெற்றுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் முடிந்தது

ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி நிறுவனங்களில் நேற்று வரை சமர்ப்பித்துள்ளனர்.

பி.எட் பட்டதாரிகள் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பப் படிவத்தை பெற்றனர். அதில் 4 லட்சத்து 90 ஆயிரம் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 23.03.2017 (இன்று) வரை விண்ணப்பிகலாம். அதற்கு பிறகு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வதற்கு நேற்று (22.03.2017) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கு இன்று கடைசி (23.03.2017) நாளாகும்.

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறும் என 23.02.2017ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்களை நீங்கள் trb.tn.nic.in என்ற அலுவலக இணையதளத்திற்குச் சென்றுப் பெற்றுக் கொள்ளலாம்.

English summary
The last date for submitting the filled in forms of TET exam came to an end today.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia