தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வந்து விட்டது. விண்ணப்பிக்க ரெடியா?

Posted By:

சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில வருடங்களாக நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்த வருடம் (2017) ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தவிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறும் என 23.02.2017ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வந்து விட்டது.  விண்ணப்பிக்க ரெடியா?

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்விற்கான வாய்ப்பு எப்போது வரும் எனக் காத்துக் கொண்டிருந்நவர்களுக்கு இந்த வருடம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மார்ச் 23ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்களை நீங்கள் trb.tn.nic.in என்ற அலுவலக இணையதளத்திற்குச் சென்றுப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பட்டியலைச் சார்ந்தவர்களுக்கு Rs. 500ம் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு Rs. 250ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வயது வரம்பு : 38 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் 2 வருட டிப்ளமோ கோர்ஸ் (எஜிகேஷன்) அல்லது பி.எட் கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் குறைந்த பட்சம் 50% மார்க்குகளைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தது 60% மார்க்குகளைப் பெற்றிருக் வேண்டும்.

English summary
Tamil Nadu TET Application Form 2017 Notification /Exam Date & Advertisement : Tamil Nadu State Teacher Eligibility Test 2017 Apply Online trb.tn.nic.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia