டி.என்.பி.எஸ்.சி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 2ம் கட்ட கலந்தாய்வு... மே 19ல் நடைபெறுகிறது..!

Posted By:

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் டி.என்.பி.எஸ்.சி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 2ம் கட்ட கலந்தாய்வு 19ந் தேதி நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக கடந்த 12.11.2015 அன்று விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 28.02.2016 அன்று நடைபெற்றது.

டி.என்.பி.எஸ்.சி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 2ம் கட்ட கலந்தாய்வு... மே 19ல் நடைபெறுகிறது..!

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் கடந்த 01.07.2016 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் நிரப்பப்படாமல் உள்ள 147 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 13.03,2017 முதல் 15.03,2017 வரை நடைபெறுகிறது.

தற்போது 2ம் கட்ட கலந்தாய்வு சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 19ந் தேதி நடைபெறும். 2ம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ப்பதாரர்களின் பதிவு எண் பட்டியல் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தில் வர தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

English summary
The TNPS Village Administrative Officer has been informed that the 2nd meeting will be held on August 19.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia