தொழில் துறை மற்றும் வணிகத்துறையில் உதவி இயக்குநர் பணி.. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Posted By:

சென்னை : தொழில்துறை மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விருமபும் விண்ணப்பதாரர்கள் 13 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இந்தத் தேர்வு இரண்டுப் பகுதியாக நடத்தப்படும். முதல் தாள் தேர்வு 16 ஜீலை 2017ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படும். இரண்டாம் தாள் தேர்வு மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறை மற்றும் வணிகத்துறையில் உதவி இயக்குநர் பணி.. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தொழில்துறை மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் பணிக்கான கல்வித் தகுதிகள் -

வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பொருளியல், கணிதம், புள்ளியியல் மற்றும் கூட்டுறவு ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக் வேண்டும்.

காந்தி கிராம் ஊரக கழகம், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பாரதிதாசன் அல்லது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

பட்டயக் கணக்காளர்கள் இணை உறுப்பினர்கள் டிப்ளமோ கோர்ஸ் படித்திருக்க வேண்டும் அல்லது விவசாய பொருளியல் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் (ஊரக உயர் கல்வி கூட்டுறவு தேசிய கவுன்சில் மூலம் வழங்கப்பட்டது).

விண்ணப்பக்கட்டணம் -

ஒன் டைம் ரிஜிஸ்டரேஷனுக்கு ரூ. 150/- வசூலிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டணம் ரூ 200/- வசூலிக்கப்படுகிறது.

17 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தவும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (40% மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்) விண்ணப்பக்கட்டணம் ஏதும் கிடையாது.

எம்பிசி, பிசி, பிசிஎம் பிரிவினருக்கு முதல் மூன்று முறை மட்டும் கட்டணம் கிடையாது. '

முன்னாள் இராணுவத்தினருக்கு முதல் இரண்டு முறை மட்டும் கட்டணம் கிடையாது.

வயது வரம்பு -

எஸ்சி, எஸ்டி பிரிவினர், எம்பிசி / டிசி, பிசி, பிசிஎம் மற்றும் கணவரை இழந்தோர் ஆகியோருக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. குறைந்தது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மற்றவர்கள் - 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் கூடுதலாக வயது வரம்புச் சலுகை அளிக்கப்படுகிறது.
தேர்வு மையக் குறியீடு -

சென்னை - 0100

கோயம்புத்தூர் - 0200

மதுரை - 1000

மேலும் தகவல்களுக்கு www.tnpscexams.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Tamil Nadu Public Service Commission has announced that 4 vacancies are there in Assistant Director post in Industries and Commerce, dept.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia