குரூப்-1 மெயின் தேர்வு விடைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்- டிஎன்பிஎஸ்சி தகவல்

Posted By:

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் குரூப்-1 மெயின்தேர்வின் விடைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

குரூப்-1 மெயின் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வை 3 ஆயிரத்து 450 பேர் எழுதினார்கள். தேர்வின் விடைகள் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

குரூப்-1 மெயின் தேர்வு விடைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்- டிஎன்பிஎஸ்சி தகவல்

இதுகுறித்து அவர், "குரூப்-1 மெயின் தேர்வை எழுத 4 ஆயிரத்து 282 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 20 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 3 ஆயிரத்து 450 பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

இந்த தேர்வு சென்னையில் மட்டும் நடத்தப்படுகிறது. அதாவது 43 மையங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 10 அறைகள் உள்ளன.

ஒவ்வொரு அறைக்கும் தலா 10 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு 7 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த தேர்வுக்கான விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். 74 பணியிடங்களை கொண்ட புதிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

English summary
TNPSC announced group 1 main examination answers will release on next week.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia