ஆன்-லைனில் விண்ணப்ப சேவை: டிஎன்பிஎஸ்சி அறிமுகம்

Posted By:

சென்னை: ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பும் சேவையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிமுகம் செய்துள்ளது. அதாவது தமிழகத்திலுள்ள கேபிள் இ-சேவை மையங்கள் மூலம் இந்த விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பலாம்.

புதிய தலைவர்

இத்தகவலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவர் அருள்மொழி சென்னையில் தெரிவித்தார்.

இ-சேவை மையங்கள்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள 280 அரசு கேபிள் இ-சேவை மையங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

 

கட்டணச் சேவை

நிரந்தரப் பதிவுக்கு ரூபாய் 50, தேர்வு விண்ணப்பத்துக்கு ரூபாய் 30 கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூபாய் 5, நகல் பெற ரூபாய் 20 கட்டணமாக வசூலிக்கப்படும்.

வட்டாட்சியர் அலுவலகங்கள்

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எல்காட் மூலம் செயல்படும் இ-சேவை மையங்களுக்கும் சேவை விரிவுப்படுத்தப்படும்.

விரைவில் குரூப் 4 தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

டவுன்லோடு செய்தல்

இந்த இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்தல், பிரிண்ட் எடுத்தல், மாற்றம் செய்தல் போன்ற பணிகளைச் செய்துகொள்ளலாம்.

 

30 லட்சம் பேர் பயன்

இந்தச் சேவை மூலம் சுமார் 30 லட்சம் பேர் பயனடைய வாய்ப்புள்ளது. விரைவில் குரூப்-4 தேர்வுகள், விஏஓ தேர்வுகள் நடைபெறவுள்ளது. குரூப்-4 தேர்வுகளுக்கு 15 முதல் 17 லட்சம் பேரும், விஏஓ தேர்வுகளுக்கு 10 முதல் 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்க வாய்பப்புள்ளது. அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

English summary
The Tamil Nadu Public Service Commission (TNPSC) here launched online application service on Wednesday. The e-service has been integrated with the common service centres established by the Tamil Nadu Cable TV Corporation in all taluk offices, 15 zonal offices of Chennai Corporation and its headquarters in Ripon Building, according to K. Arulmozhi, Chairman, TNPSC.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia